மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாறுமாறாக வசூலை குவித்த சூப்பர் ஸ்டாரின் பேட்ட! தலைவரு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?? வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த திரைப்படம் பேட்ட. இது ரஜினியின் 165வது படமாகும். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரள வைத்திருந்தார். மேலும் சிம்ரன், மாளவிகா மோகனன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பேட்ட படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. அனிருத் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
பேட்ட படம் அனைவரும் ரசித்து பார்க்ககூடிய படமாக அமைந்தது. இந்த படம் சூப்பர் ஹிட்டாகி உலகளவில் சுமார் ரூ.230 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக சூப்பர்ஸ்டார் ரஜினி ரூ. 65 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.