திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளிவந்த தகவல்!!
தமிழ் சினிமாவில் 80,90ஸ் காலக்கட்டங்களில் ரஜினி, கமல், பிரபு, விஜயகாந்த், சரத்குமார் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது.
ரம்யா கிருஷ்ணன் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் படையப்பா. ரஜினி நடிப்பில் உருவான இப்படத்தில் பயங்கர வில்லியாக, நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து ரம்யா கிருஷ்ணன் பலரது பாராட்டுகளையும் பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் அண்மையில் பாகுபலி படத்தில் ராஜமாதா கதாபாத்திரத்தில் கெத்தாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது படையப்பா படத்திற்கு ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் பரவி வருகிறது. அதாவது படையப்பா படத்தில் மிரட்டலான, நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்ணன் ரூ. 11 லட்சம் சம்பளமாக வாங்கினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.