மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மாடியோவ்.. இந்த பெட்டியை தூக்கி வர நடிகர் சரத்குமாருக்கு இவ்வளவு சம்பளமா! ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் பிக்பாஸ் சீசன் 5, தற்போது விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் 20 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்ற இந்நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்
அதாவது ராஜு, நிரூப், அமீர், சிபி, பாவனி, தாமரை, பிரியங்கா ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் வீட்டிற்குள் பணப்பெட்டி அனுப்பி வைக்கப்படும். அந்தத் தொகையை வைத்துக்கொண்டு போட்டியாளர் யாரேனும் வீட்டை விட்டு வெளியேறலாம். இந்த நிலையில் நேற்று நடிகர் சரத்குமார் 3 லட்சம் அடங்கிய பணப்பெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டுவந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பெட்டியைக் கொண்டு வந்த சரத்குமாருக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.