மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம சூப்பர்... தளபதி ரசிகர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட சேலம் கலெக்டர்.!
தமிழ் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு இன்பமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்காக அதிகரித்தது. இந்நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் நாளை வெளியாக இருக்கிறது. இதற்காக தளபதி விஜய் ரசிகர்கள் திருவிழா போல இந்த நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் விஜயுடன், திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத் இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின. இந்தத் திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் அது தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் சேலம் ரசிகர்களுக்கு இன்பமான செய்தியாக புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மாவட்ட கலெக்டர். அந்த அறிவிப்பின்படி நாளை முதல் 24 ஆம் தேதி வரை லியோ திரைப்படம் 5 காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காட்சிகள் காலை 9 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை தான் ஒளிபரப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.