திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கடவுளே... ரீமேக் ஆகும் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படம்... ஹீரோ யார் தெரியுமா.? ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்து தமிழில் அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹூட் அடித்த திரைப்படம் தான் என்னை அறிந்தால். இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இப்படத்தில் சல்மான் கான் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அஜித்தின் வீரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் தான் நடித்திருந்தார். அதனை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தற்போது அஜித்தின் என்னை அறிந்தால் படத்திலும் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை ஷாக்காக வைத்துள்ளது.