ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா... பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளம் வேண்டுமா... அதிர்ச்சியில் நிர்வாகம்...
இந்திய அளவில் மிக பிரமாண்டமான நிகழ்ச்சியில் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி முதலில் ஆரம்பமானது இந்தி மொழியில் தான்.
இந்தி மொழியில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்து தற்போது 16 வது சீசன் ஆரம்பமாகவுள்ளது. நிறைவடைந்த 15 சீசனையும் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கினார்.இதற்கிடையே சல்மான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேற பலமுறை விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால் பிக்பாஸ் குழு அவரை விடுவதாக இல்லை.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 16 தொகுத்து வழங்க சல்மான் கான் அதிக சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 15 வது சீசனுக்கு சம்பளமாக 350 கோடி வாங்கிய நிலையில் தற்போது அதை விட மூன்று மடங்கு அதாவது 1050 கோடி சம்பளமாக நடிகர் சல்மான் கான் கேட்டுள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்காக இவ்வளவு சம்பளம் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.