மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி இப்படிதான்! நடிகை சமந்தா போட்ட அதிரடி கண்டிஷன்! எதனால் தெரியுமா?
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் விஜய், சூர்யா,தனுஷ், ஜீவா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏரளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கிறார்.
மேலும் சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கொரோனோவால் வீட்டில் முடங்கியிருக்கும் சமந்தா மொட்டை மாடியில் விவசாயம் செய்வது, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது என பிசியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் சமந்தா தற்போது தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புதிய கண்டிஷன் ஒன்று போட்டுள்ளார். அதாவது தனக்கு புதிய எண்ணிலிருந்து யாரேனும் போல் செய்ய வேண்டுமென்றால் முதலில் அவர்களது பெயர்களை மெசேஜ் அனுப்பிவிட்டு பிறகு போன் செய்ய வேண்டுமாம்.
ஏனெனில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மற்றும் உணவு டெலிவரி செய்பவர்களின் மூலம் எனது தொலைபேசி எண் சிலருக்கு தெரிந்த நிலையில், அவர்கள் போன் செய்து, ஏற்பட்ட கசப்பான அனுபவத்திலேயே தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்