#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தீவிர உடல்நலப் பாதிப்பால் சிகிச்சை பெறும் நடிகை சமந்தா.! இந்த உணவையெல்லாம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டாரா??
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை சமந்தா விஜயதேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த குஷி திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அலர்ஜி நோய் இருந்தது. அதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டார். ஆனாலும் நோய் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் சமந்தா தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். நடிகை சமந்தா தனது உடல்நிலை பாதிப்பை கவனத்தில் கொண்டு தனது உணவு பழக்க வழக்கத்தை முழுமையாக மாற்றியுள்ளாராம்.
அவர் நோயை தீவிரப்படுத்தும் உணவுகளான கிழங்கு, தக்காளி, முட்டை, பால், நட்ஸ், பிரட் உட்பட தனக்கு பிடித்தமான பல உணவுகளை தவிர்த்து விட்டாராம். இந்நிலையில் சமந்தா ஒரு வருடம் நான்கு மாதங்களுக்குப் பிறகு தனக்கு பிடித்த பிரெட்டை, பட்டருடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.