மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வாரம் ஃபுல்லா இதுதான் ஸ்பெஷல்! லாக்டவுனில் நடிகை சமந்தா செய்த அசத்தல் காரியம்! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மொழியில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அடுத்ததாக சமந்தா தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சமந்தா தனது வீட்டு மொட்டை மாடியில், வீட்டிற்கு தேவையான காய்கறிகள் அனைத்தையும் பயிரிட்டு கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனது மாடி தோட்டத்தில் விளைந்த கேரட்களை அறுவடை செய்துள்ளார். மேலும் அதனை தனது கையில் வைத்தவாறு இருந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இந்த வாரம் முழுவதும் எங்கள் வீட்டில் கேரட் ஜுஸ், கேரட் பச்சடி, கேரட் அல்வா, கேரட் பிரை, கேரட் பக்கோடா, கேரட் இட்லி, கேரட் சமோசாதான் என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் சூப்பர் என கூறி வருகின்றனர்.