#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் இன்னும் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்.! கண்ணீர் விட்ட நடிகை சமந்தா! ரசிகர்களை கலங்கவைத்த வீடியோ.!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. அவர் தற்போது யசோதா என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அண்மையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் மயோசிடிஸ் என்னும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் முழுவதும் குணமடைந்து விடுவேன் எனவும் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பலரும் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சமந்தா யசோதா படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
#Samantha opens up about handling her health issues. #Yashoda #YashodaTheMovie pic.twitter.com/r2Xc3uUuKT
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) November 8, 2022
இந்நிலையில் அவர் சேனல் ஒன்றிற்கு கண்ணீருடன் அளித்த பேட்டி இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சமூக வலைதளத்தில் நான் கூறியவாறு சில தினங்கள் மிகவும் நன்றாகவும், சில தினங்கள் மோசமானதாகவும் இருக்கிறது. சில நாட்களில் என்னால் ஒரு அடி நடக்கமுடியாமல் மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் திரும்பிப் பார்த்தபோது நான் பல விஷயங்களைக் கடந்து வெகு தூரம் வந்திருப்பதை நானே ஆச்சரியமாக பார்ப்பேன். நான் போராடவே உள்ளேன்.
இதற்கிடையில் நான் உயிருக்கு போராடி, ஆபத்தான நிலையில் இருப்பதாக சில செய்திகளை கண்டேன். அப்படி எதுவும் இல்லை. இப்போதுவரை நான் சாகாமல் உயிரோடுதான் உள்ளேன். அத்தகைய செய்திகள் அவசியம் என நான் நினைக்கவில்லை என்று கண்ணீர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.