ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடஅட.. நண்பர்களுடன் செம ஜாலியாக ஊர்சுற்றும் நடிகை சமந்தா.! இணையத்தை கலக்கும் கியூட் புகைப்படங்கள்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளிலேயே பிரிந்தனர். அதனை தொடர்ந்து சமந்தா சினிமாவில் பெருமளவில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டார். மேலும் அதற்காக அவர் தீவிர சிகிச்சையும் எடுத்து வந்தார். பின் உடல்நலம் தேறிய அவர் தளராமல் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சாகுந்தலம் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் சமந்தா அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா தனது நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது.