ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
விவாகரத்திற்கு பின் சுதந்திர பறவையான சமந்தா! இப்போ என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சமந்தா. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் உள்ளன.
நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர காதல் ஜோடிகளாக விளங்கி வந்த இருவரும் அண்மையில் கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்துக்குப் பின்பு சுதந்திரப் பறவையாக வாழ்ந்து வரும் சமந்தா சைக்கிளின், போட்டிங் என வெவ்வேறு விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டத் துவங்கி தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். மேலும் மன ஆறுதலுக்காக ஆன்மீக சுற்றுலாவும் சென்று வந்தார். இந்நிலையில் அவர் தற்போது புதிதாக ஓவியம் வரையத் துவங்கியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர் ஒரு காலத்தில் தனது மனது ஓவியம் வரையக் கூடாது எனக் கூறியதாகவும், தற்போது வரையத் தொடங்கிய பின்பு அது அமைதியாகிவிட்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை சமந்தா ஓவியர் மனோகர் சில்லுவேருவின் Hope Kosmos ஆர்ட் புராஜெக்ட்டிற்காக இந்த ஓவியத்தை வரைவதாகவும், இதன் மூலம் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.