மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மலையாள நடிகர் மம்மூட்டியின் நடிப்பை புகழ்ந்து தள்ளிய சமந்தா.. வைரலாகும் பதிவு.!
கடந்த 23ஆம் தேதி வெளியான மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த 'காதல் தி கோர்' என்ற திரைப்படம் மலையாள சினிமாவில் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் கதையானது நிகழ்கால கலாச்சாரங்களில் இருந்து வேறுபட்டது.
ஓய்வு பெற்ற ஒரு வங்கி மேலாளரின் மனைவியாக இருப்பவர், தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை ஒட்டிய சாராம்சங்களுடன் கதைக்களம் நகர்கிறது. இந்த கதை விமர்சனங்களுக்கும், பாராட்டுகளுக்கும் உட்பட்டு வருகிறது.
இதில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் கணவன் மனைவியாக நடித்திருப்பவர். இந்தப் படத்தை மம்மூட்டி அவர்களின் சொந்த கம்பெனியே தயாரித்துள்ளது. படத்தை பிரபல இயக்குனர் ஜியோ பேபி அவர்கள் அழுத்தம் திருத்தமாக இயக்கியிருக்கிறார்.
இது குறித்து நடிகை சமந்தா கூறியிருப்பதாவது, நடிகர் மம்மூட்டி அவர்களின் நடிப்பில் இருந்து தன்னால் வெளிவர முடியவில்லை என்றும், ஜோதிகாவை லெஜண்ட் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குனர் ஜியோ பேபி அவர்களையும் வெகுவாக பாராட்டி இருக்கிறார்.