மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. ஜோடி போட்டு நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்த சமந்தா! அட.. யாருனு பார்த்தீங்களா! குவியும் லைக்ஸ்கள்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா 2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சில காரணங்களால் கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதனை தொடர்ந்து சமந்தா படங்கள், சுற்றுலா செல்வது என பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில் சமந்தா அண்மையில் விவாகரத்தால் மன உளைச்சல் அடைந்து இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால் நான் எவ்வளவு வலிமையானவள் என இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன் என கூறியுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவர் அண்மையில் தனது இரு செல்ல நாய்களுடன் காரில் சென்றநிலையில், அவை ஜோடியாக நின்ற போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.