மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் ஒன்னும் பெரிய அழகி கிடையாது! அதைவிட இதுதான் ரொம்ப முக்கியம்! அசத்தலாக கூறிய நடிகை சமந்தா!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தெலுங்கு மொழியிலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சமந்தா கைவசம் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் கேம் ஓவர் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் சமந்தா சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா கூறுகையில், என்னை பார்த்து நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய் என பலரும் கூறுகின்றனர். ஆனால் நான் ஒன்றும் பெரிய அழகி கிடையாது. நன்றாக மேக்கப் போட்டு, நல்ல உடைகள் அணிந்தால் என் வயது பெண்கள் அனைவருமே அழகாகதான் இருப்பார்கள்.
நான் காலேஜ் படிக்கும்போது பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்தினேன். ஆனால் நாட்கள் ஆகஆக எனக்கு அழகு மீதான ஆர்வம் குறைந்து விட்டது. அழகு என்பது வயதாக போய்விடும். அனைவர்க்கும் அவர்களது நல்ல குணம்தான் மிக முக்கியம். அதுமட்டும்தான் சாகும்வரை மாறாது. நான் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும், யாருக்கும் நம்மால் எந்த கெட்டதும் நடந்துவிடக்கூடாது என்பதை மிகவும் யோசிப்பேன் என சமந்தா கூறியுள்ளார்.