அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
விளம்பரபடுத்த விரும்பல! தீயாய் பரவும் தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சமுத்திரகனி!!
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடந்து முடிந்தது. இதில் பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓட்டளித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்,
அதே சமயம் ஏராளமான திரைப் பிரபலங்கள் ஒரு சில காரணங்களால் வாக்களிக்க வரவில்லை. அந்த வரிசையில் பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகரும், பிரபல இயக்குனருமான சமுத்திரக்கனியும் ஓட்டளிக்கவில்லை என தகவல்கள் பரவி விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில் அவ்வாறு பரவி வரும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் சமுத்திரகனி ஓட்டு போட்டதற்கு அடையாளமான மை இடப்பட்ட விரலை காட்டியவாறு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் நானும், என் மனைவியும் காலை 6.55 மணிக்கே வாக்குச்சாவடிக்கு சென்றுவிட்டோம். ஆனால் ஓட்டு போடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் 40 நிமிடம் அங்கேயே காத்திருந்து முதல் ஆளாக ஓட்டு போட்டுவிட்டு வந்தோம்.
நான் வழக்கம்போல எனது கடமையை செய்து முடித்துவிட்டேன். மேலும் நான் ஓட்டு போட்டதை விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளார்.