திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஏமாற்றிய பணத்தை பாக்கியில்லாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும்!" பருத்திவீரன் சர்ச்சையில் சமுத்திரக்கனி குமுறல்.!
2007ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். சமீபத்தில் அமீர் பருத்திவீரன் படத்தால் தனக்கு கடன் ஏற்பட்டதாக கூறியிருந்தார். இதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அமீரை குற்றம் சாட்டினார்.
"அமீர் தான் என்னை ஏமாற்றினார். உழைத்து உண்ணாமல் திருடி உண்கிறார்" என்று கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்கரா என அனைவரும் களமிறங்கினர்.
இதையடுத்து ஞானவேல் ராஜா, "அமீரின் குற்றச்சாட்டுகள் தன்னை காயப்படுத்தியதாகவும், தான் பேசியது அமீரை புண்படுத்தியிருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலளித்து சமுத்திரக்கனி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "எந்தப் பொதுவெளியில் ஏகத்தாளமாக நின்று சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பருத்திவீரன் படத்தில் அனைவருக்கும் சம்பளம் பாக்கி இருக்கிறது. ஒரு பைசா விடாமல் மொத்தப் பணத்தையும் திருப்பித் தரவேண்டும்" என்று கூறியுள்ளார்.