மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உங்கள சொந்த அண்ணனா நெனச்சேன், நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கல" நடிகை சம்யுக்தாவின் உருக்கமான வீடியோ..
சமீபத்தில் இணையத்தில் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் செய்தி சீரியல் நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவின் விவாகரத்து செய்தி தான் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதனை அடுத்து சம்யுக்தா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்
சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு முன்பு பல யு டயூப் சேனல்களில் பேட்டியளித்துள்ளனர். திருமணம் ஆகி ஒரே மாதத்தில் இவர்களுக்கு விவாகரத்தாக போவது என்று செய்தி இணையத்தில் வைரல் ஆனது.
இதனையடுத்து ஒருவருக்கு ஒருவர் தங்களின் மேல் உள்ள தவறுகளை வீடியோ மூலம் வெளியிட்டனர். தற்போது விஷ்ணுகாந்த், சம்யுக்தாவை பற்றிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அந்த ஆடியோவில் சம்யுக்தா ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலித்தார் என்று பேசியிருக்கிறார். சம்யுக்தாவும் 'நிறைமாத நிலவே வா' என்ற வெப் சீரிஸ் இயக்குனரும் பேசியது தான் அந்த ஆடியோ. இந்த ஆடியோவை வெளியிட்ட பிறகு சம்யுக்தா "நான் உங்களை அண்ணன் மாதிரி நினைத்து தான் எல்லா உண்மையும் சொன்னேன். நீங்கள் இப்படி பண்ணுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.