மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ் முதல்ல அதை மாத்துங்க!! பிறந்தநாள் அதுவுமா ஆரிக்கு சனம் வைத்த கோரிக்கை!! என்னனு பார்த்தீர்களா!!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் பெரும் ஆதரவை பெற்று வெற்றியாளரானவர் ஆரி. பிரபல நடிகரான இவர் சமூக அநீதிகளுக்கு குரல் கொடுத்து, ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மேலும் மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை மூலம் விவசாயம் குறித்த விழிப்புணர்வையும் இளம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஆரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆருக்கு ஆதரவாக நின்ற சக போட்டியாளரான சனம் ஷெட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Very happy talking to u today after long time Brother🤗 small Birthday request from me n ur fans.. unga profile le BB contestant nu dhan innum iruku. Big Boss Winner nu maathunga pl👏 You are the true winner of People's Hearts.
— Sanam Shetty (@SamSanamShetty1) February 12, 2021
மேலும் அதனுடன் ஆரியிடம் சிறு அன்பு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அதாவது, டுவிட்டர் பக்கத்தில் அவரைக் குறித்த தகவல்களில் இன்றும் பிக் பாஸ் போட்டியாளர் என்றே இருக்கிறது. இந்நிலையில் ப்ளீஸ் அதனை பிக்பாஸ் வெற்றியாளர் என்று மாத்துங்க. நீங்கள் மக்கள் மனதை வென்ற உண்மையான வெற்றியாளர் என்று சனம் தெரிவித்துள்ளார்.