மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. சாண்டி மகளாச்சே! லாலா பாப்பா அப்பாவோட போடும் தெறி ஆட்டத்தை பார்த்தீர்களா! கியூட் வீடியோ வைரல்!
பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராக பணியாற்றி, தனது திறமையால் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சாண்டி. அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடன இயக்குநராக பணியாற்றி வெற்றி பெற்றுள்ளார்.
பின்னர் சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவரது கலகலப்பான பேச்சுக்கள், காமெடிகள், கலாட்டாக்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதுமட்டுமின்றி அவர் பாய்ஸ் குரூப் என்ற பெயரில் சக போட்டியாளர்களுடன் செய்த ரகளைகள் அனைவரையும் சிரித்து ரசிக்க வைத்தது.
சாண்டியின் மனைவி சில்வியா. அவர்களுக்கு லாலா என்ற மகள் உள்ளார். சமீபத்தில் தான் அவருக்கு மூன்றாவது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடபட்டது. இந்நிலையில் தற்போது சாண்டி மற்றும் அவரது செல்லமகள் லாலா இருவரும் தெறி பட பாடலுக்கு செம கியூட்டாக நடனமாடியுள்ளனர். அந்த வீடியோவை அவர் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.