மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்! முதன்முதலாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி! என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா!!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது அட்டகாசமான நடன திறமையால் அனைவர் மனதையும் பெருமளவில் கொள்ளைக் கொண்டு பிரபலமானவர் சாண்டி. அவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் சில நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். அங்கு அவர் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்த அரட்டைகள், காமெடிகள் அனைவரையும் ரசிக்க வைத்தது. மாஸ்டர் சாண்டியின் மனைவி சில்வியா. அவர்களுக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சாண்டிக்கு அண்மையில் இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் தனது மகனுக்கு ஷான் மைக்கேல் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.