மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கியூட்! சாண்டியின் இரு குழந்தைகளும் இப்போ எப்படியிருக்காங்க பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று ரசிகர்களால் பெருமளவில் கவரப்பட்டவர் சாண்டி. இவர் இதற்கு முன்பு பல பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நடன திறமையால் அனைவரையும் அசத்தி பெருமளவில் முன்னேறினார்.
மேலும் அவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் சில நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். அவர் தற்போது மூன்று முப்பத்தி மூன்று என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்நிலையில் அவர் சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அந்த காதல் தம்பதியினருக்கு ஏற்கனவே லாலா என்ற மகள் இருந்த நிலையில், அண்மையில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சாண்டி தனது மகன் மற்றும் மகளுடன் ஒன்றாக இருக்கும் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் அனைவரும் செம க்யூட் என கொஞ்சி வருகின்றனர்.