மிரட்டலாக குத்தவைத்து அமர்ந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்! அதுவும் யாருடன் பார்த்தீர்களா! வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!



Sanik kayitham first look poster viral

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.  இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார்.

 இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். அதாவது அருண் மாதேஷ் இயக்கும் சாணிக் காயிதம் என்ற திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

keerthi Suresh

இந்த நிலையில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் குத்த வைத்து அமர்ந்து இருப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.