மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ பட நடிகருக்கு படப்பிடிப்பில் காயம்.. மருத்துவமனையில் அனுமதி.!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சஞ்சய் தத். தற்போது இவர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, கேஜிஎஃப் 2 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் 'டபுள் ஸ்மார்ட் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியின் போது சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக படக்குழுவினர் இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தையல் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.