திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவதூறு பரப்பும் அந்த 4 பேருக்கு... சந்தானம் கொடுத்த நச் பதில்.. கலகலப்பாகிய அரங்கம்.!
ஜிஎன் அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், டி..இமான் இசையில், நடிகர்கள் சந்தானம், பிரியாலையா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், முனீஷ்காந்த், அதுல், மாறன், சேசு, ஸ்வாமிநாதன், மனோபாலா, கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு (Inga Naan Thaan Kingu). இப்படம் மே 10 அன்று வெளியாகிறது.
இந்நிலையில், நேற்று படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, செய்தியாளர் ஒருவர் மறைந்த நடிகர் சேஷு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கும் ஆண்டனிக்கு நீங்கள் உதவி செய்யவில்லை என்று பல தகவல்கள் வைரலானது.
நான் நேரில் சென்று விசாரித்தபோது, சேசுவுக்கு உதவியது மற்றும் ஆண்டனிக்கு இன்று வரை உதவிகொண்டு இருப்பது நீங்கள் தான் என்பது தெரியவந்தது. பல சர்ச்சைக்குரிய தகவல் உங்களைப்பற்றி வெளியாகுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சந்தானம், "அது தெரியவில்லை. அனைவரும் என்னை பிடிக்கிறது என்று பேசினால் நான் கடவுளாகிவிடுவேன். சிலர் பிடிக்கவில்லை என்று பேசத்தான் செய்வார்கள். அதனை கண்டுகொள்ளத்தேவையில்லை. நான் படத்தில் காமெடி வைத்தாலும், நான் சிரிக்கமாட்டேன் என 4 பேர் இருப்பார்கள்.
#IngaNaanThaanKinguFromMay10#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms @Gopuram_Cinemas @iamsanthanam @Priyalaya_ubd @dirnanand @immancomposer @Bala_actor @actorvivekpra #ThambiRamaiah #Munishkanth #CoolSuresh @manobalam @om20narayan @SaktheeArtDir @thiyaguedit @VigneshShivN pic.twitter.com/296qcM155N
— Gopuram Films (@gopuramfilms) May 4, 2024
அவர்களை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?. என்னை ரசிப்பவர்களை நான் கவனித்துக்கொண்டால் போதும். நம்மை கண்டுகொள்ளாதவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் அல்லவா?. உங்களைப்போல சிலர் அதனை விசாரித்து உண்மையை கூறுகிறீர்கள். அதனால் மகிழ்ச்சியே" என பேசினார்.
தொடர்ந்து பேசிய சந்தானம், கரீனா சோப்ரா போல பெண் வேடம் எனக்கு அழகுராஜா படத்திற்கு பின் அமையவில்லை. கட்டாயம் அதற்கான வாய்ப்பு கிடைத்தால் பெண் வேடம் போடுவேன் என கூறி அரங்கத்தை கலகலப்பாக்கினார்.