திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லியோ திரைப்படத்தை மறைமுகமாக கலாய்த்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட சந்தானம்.. வைரலாகும் வீடியோ..
முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தானம். இதன் பிறகு தனது நடிப்புத் திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காலடி எடுத்து வைத்தார்.
இவ்வாறு காமெடி நடிகராக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த சந்தானம் சில வருடங்களுக்குப் பிறகு தற்போது கதாநாயகனாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ், ஏ1, தில்லுக்கு துட்டு, டிக்கிலோனா, போன்ற திரைப்படங்கள் ஒரு அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இவர் தற்போது '80ஸ் பில்டப்' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சந்தானம் பேசிய போது தற்போதுள்ள பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் 80ஸ் பாடல்களை போட்டு பில்டப் செய்கின்றனர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இவர் விஜயைத் தான் மறைமுகமாக பேசி வருகிறார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் 80 பாடல்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.