திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சந்தானத்தின் DD Returns படம் எப்படி?... முதல் அசத்தல் ரிவியூ இதோ.. அரங்கம் அதிர, வயிறு குலுங்க கலகல சிரிப்பு..!
காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானம், சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், பிரதீப் ராம் சிங் உட்பட பலர் நடித்து ஜூலை 28ம் தேதியான இன்று வெளியாகியுள்ள திரைப்படம் DD Returns.
இந்த படத்தை ஆர்.கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கி வழங்கியுள்ளார். படம் காமெடி கலந்த திரில்லர் கதையாக உருவாகியுள்ளது.
சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு திரைப்படம் நல்ல வரவேற்பை அளித்த நிலையில், அதே பாணியில் டிடி ரிட்டன்ஸ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் சந்தானத்திற்கு நல்ல வரவேற்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பிரமுகர்களுக்கு காட்சியளிக்கப்ட்டது. அப்போது, படத்தை பார்த்த இயக்குனர் சோலை ஆறுமுகம், "சந்தானம் நடித்த DD Returns படம் செம்மையா இருக்கு, படம் முழுக்க காமெடி. நீண்ட இடைவெளிக்கு பின் தரமான வெற்றிப்படம்.
இரட்டை அர்த்த வசனம் இல்லை, கிளாமர் இல்லை, படம் முழுவதும் வயிறு வலிக்கும் அளவுக்கு காமெடி உள்ளது. மொட்டை ராஜேந்திரன் மற்றும் முனீஸ்காந்த் கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள், குடுமபத்தோடு பார்க்க தரமான பொழுதுபோக்கு படம். பல காட்சிகளுக்கு கைகளை தட்டி கைவலியே வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
அதேபோல, திரைத்துறை நிருபர் செய்யாறு பாலு, "சைக்கோ சகதியில் கோடம்பாக்கத்தையே போட்டு புரட்டிக்கொண்டிருக்கிற நேரத்தில் அடிவயிறு அலசராகிவிடுமளவுக்கு ஒரு சிரிப்பு கூட்டணி தந்துள்ள படம் தான் டிடி ரிட்டன்ஸ்" என தெரிவித்துள்ளார்.
#DDReturns getting positive reports 👍💥🔥💐
— 🎭 (@thatsit_7) July 27, 2023
Here #AK reference in the movie 👍😇🥳🎉@iamsanthanam is back 👍💥🎉🎉🥳🙏#DDReturnsfromJuly28 #DDReturns 🤜🤛 #VidaaMuyarchi pic.twitter.com/MnRmsT87Fh