திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் புரோமோ வெளியீடு.!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகரா அறிமுகமாகி முன்னணி நடிகராக உருவானவர் காமெடி நடிகர் சந்தானம். இவர் நிறைய படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் கிக் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகர் சந்தானம் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 80ஸ் பில்டப் என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் 80ஸ் பில்டப் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.