மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! நீண்ட தாடி, கூலிங் கிளாஸ்.. நடிகர் சந்தானமா இது! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படம்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் காலடி வைத்தவர் நடிகர் சந்தானம். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தனது தீராத முயற்சியால் அவர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.
பின்னர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்து பல படங்களிலும் நடித்துள்ள அவர் ஆக்ஷனிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். நடிகர் சந்தானம் கைவசம் தற்போது பிஸ்கோட், டிக்கிலோனா போன்ற திரைப்படங்கள் உள்ளது. இந்நிலையில் அவர் தற்போது கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார்.
மேலும் தற்போது லாக் டவுனில் வீட்டில் இருக்கும் நடிகர் சந்தானம் நீண்ட தாடி மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இதனை கண்ட ரசிகர்கள் நடிகர் சந்தானமா இது! இப்படி மாறி விட்டாரே என பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.