மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீனாவை பெண் கேட்டு சென்ற பிரபல நடிகர் இவரா? வெளியான சுவாரஸ்ய தகவல்.!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது வயதான காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனையடுத்து மீனா சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரமாண்டமாக கொண்டாடினர். இதனிடையே கணவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை மீனா உச்ச நடிகையாக இருந்த போது நடிகர் சரத்குமார் மீனா மீது காதல் கொண்டு என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டதாகவும், அதற்கு மீனா என் வீட்டில் வந்து முறையாக பெண் கேளுங்கள் என கூறியுள்ளார்.
இதனையடுத்து சரத்குமார் அவர்கள் வீட்டிற்கு சென்று பெண் கேட்க மீனாவின் அம்மா, இவள் இப்போதுதான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கிறாள். எனவே நாங்கள் திருமணத்தைப் பற்றி இன்னும் யோசிக்கக்கூட இல்லை எனக் கூறிய நிராகரித்து உள்ளாராம். அந்த சமயத்தில் சரத்குமார் ஏற்கனவே சாயா என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.