#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரவணன் மீனாட்சி ரியோ நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.!
தமிழகத்தில் மிகவும் பிரமாண்டமாக, விஜய் Tv சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த தொடர் தான் சரவணன் மீனாட்சி. இந்த நிகழ்ச்சி மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மீனாட்சிக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகர் ரியோ ராஜ்.
இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
Here is the poster of my first and only short film :) director by @i_am_punith I'm happy to be part of this amazing and hardworking team. Trailer will be out soon. :)#KadhalOndruKanden. Best wishes to the team 😊✌🏻
— Rio raj (@rio_raj) January 4, 2019
Cast @rio_raj @i_amak @nakshathra__ @Bala_actor#KOKFirstLook pic.twitter.com/kpCJxUUq33
இயக்குனர் புனித் இயக்கும் இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நட்சத்திரா நடிக்கிறார். காதல் ஒன்று கண்டேன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிரபல அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத், அஸ்வின் குமார், நாகேஷ் உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடக்கின்றனர். தற்போது அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.