திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா.. வேற லெவல்தான்! நடிகர் கார்த்தியின் சர்தார் படைத்த வசூல் சாதனை! எத்தனை கோடி தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சர்தார் படத்தில் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், முரளி சர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்திலும், வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டேவும் நடித்துள்ளனர். படம் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது.
மேலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற அப்படம் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. அதாவது இதுவரை உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அதனால் படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிக்கவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.