ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும், தர்சனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல முன்னணி நடிகை!!
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி என 6 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் ஸ்ரீலங்காவை சேர்ந்த மாடல் தர்ஷன். இவர் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் பெற்றவர்.மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர்.மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், யார் வம்புக்கும் செல்லாமல் நேர்மையாக இருப்பவர்.
இந்நிலையில் பிக்பாஸ் துவக்கத்தில் தர்சனுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் பாத்திமா பாபு. தர்சனும் அவரிடம் அம்மா என கூறி மிகவும் அன்புடன் நடந்துகொண்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாத்திமா பாபு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது எங்க வீட்டில் தர்சனை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். யாரும் அவனை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மேலும் மாபெரும் பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் தர்சனை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார் ஆனால் அவரைப் பற்றி தற்பொழுது கூற முடியாது. சில காலம் காத்திருந்து தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.