திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.! விஜய் சேதுபதியின் க்யூட்டான நியூ லுக்.. எந்தப் படத்திற்கு தெரியுமா.?
தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வனாக கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடித்த ஜவான் என்ற பாலிவுட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர். சமீபத்தில் இயக்குனர் அமீர் உடைய உணவகமான லா காபி திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது மெல்லிய மீசையுடன் புதிய லுக்கில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மக்கள் செல்வன்.
இந்த லுக் அவரது புதிய படத்திற்கான தோற்றமாக இருக்குமா.? என ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குனர் மிஷ்கினின் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அந்தத் திரைப்படத்தை தானு தயாரிக்கிறார்.
இந்தத் திரைப்படத்திற்கான புதிய லுக்கில் தான் விஜய் சேதுபதி இருக்கிறார் என தகவல்கள் தெரிவித்து இருக்கின்றன. இந்தத் திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியின் தமிழ் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.