மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்ம கலெக்ஷன்.. பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் சீதாராமம்..! 4 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?..!!
நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் கடந்த வாரம் திரையில் வெளியான படம்தான் சீதாராமம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், நிச்சயம் படம் அனைவரையும் கவரும் என்று படக்குழு சார்பில் முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
கிட்டத்தட்ட 4 நாட்களில் சுமார் ரூ.25 கோடிகளுக்கும் மேல் சீதாராமம் படம் வசூல் செய்துள்ளது. அத்துடன் கண்டிப்பாக படம் ரூ.60 கோடி வரையிலும் வசூல் செய்யும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்த்து இருக்கின்றன.