#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜிவி பிரகாஷ் - கௌதம் மேனன் நடித்துள்ள செல்ஃபி! வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ! நீங்க பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள இடிமுழக்கம், ரெபெல் போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் செல்ஃபி.
இதனை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர்களுள் ஒருவரான மதிமாறன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக பிகில் படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த செல்பி படம் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது செல்பி படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.