திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தன் பிறந்தநாளை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடிய செல்வராகவன்.! யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா.! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அவர் முன்னணி நடிகரான தனுஷின் அண்ணன் ஆவார். இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக அவதாரமெடுத்து சாணிக் காயிதம் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார்.
மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் செல்வராகவன் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள பகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூறினர். மேலும் அவர் தனது பிறந்த நாளை தம்பி தனுஷ் மற்றும் குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.