மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவிலிருந்து மீண்ட நடிகர் சென்ட்ராயன்! கருப்பு பூஞ்சை தொற்றிலிருந்து தப்ப கொடுத்த ஐடியா! வைரலாகும் வீடியோ!!
தற்போது கொரோனா தொற்று இரண்டாவது அலையாக நாடு முழுவதும் பெருமளவில் பரவி வருகிறது. சாமானிய மக்கள் முதல் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழக்கும் துயரமும் நேர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சென்ட்ராயன் கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். மேலும் இது குறித்த வீடியோவை அவர் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அது வைரலான நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் மீண்டு வர வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு சென்ட்ராயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா என்னை விட்டு போயிருச்சு. எனக்கு கொரோனா என தெரிந்ததும் நான் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. ஆனால் தற்போது கருப்பு பூஞ்சை என்ற தொற்று பரவி வருகிறது. இது கண்ணைதான் பெருமளவில் பாதிக்கிறதாம். கொரோனாவிற்கு மாஸ்க் போடுவது போல, கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.