திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தான் கர்ப்பமாக இருக்கிறேன் என கூறி, சென்ராயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவரின் மனைவிக்கு, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சென்ராயன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்களிடையே மிகவும் பிரபலம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெகுளியாக பேசியதால் மக்கள் மனதில் இடம்பிடித்தார். சென்ராயன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போதே தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சென்ராயனின் மனைவி கயல்விழி.
இதற்கு நன்றிக்கடன் தீர்க்கும் வகையில் தர்போது மனைவி கயல்விழிக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார் சென்ராயன். தனது மனைவி கயல்விழி, நடிகை சினேகாவின் தீவிர ரசிகை என்பதை சென்ராயன் அறிந்துள்ளார்.
தனது மனைவி கயல்விழி சினேகாவை பார்க்க வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்ததை தெரிந்து கொண்ட சென்ராயன், சினேகாவின் வீட்டுக்கு அழைத்து சென்று, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து நடிகை சினேகாவும் அவருடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும் அவர்கள் சினேகாவுடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியின் ஆசையை பூர்த்தி செய்த சென்ராயனுக்கு பாரட்டுகள் குவிந்து வருகின்றன. சென்ராயன் தன் கர்ப்பிணி மனைவியின் ஆசையை நிறைவேற்றியதை நீங்கள் பாராட்ட நினைத்தால் கீழே கருத்துக்களை பதிவிடுங்கள்.