திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் கட்டியுள்ள புது வீட்டை பாத்திங்களா? புகைப்படம் இதோ!
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகினர்.
இவர்களது பாட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவான நிலையில் போட்டியின் இதுவரை சென்று சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார் செந்தில் கணேஷ். அதன்பிறகு தமிழ் சினிமாவில் பல்வேறு பாடல்களை இருவரும் சேர்ந்து பாடிவருகின்றனர்.
சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல், பட்டி தொட்டியெல்லாம் பரவி மாபெரும் ஹிட் அடித்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பாடல், வெளிநாடு பயணம் என பயங்கர பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் அவர்களது சொந்த ஊரான களபம் கிராமத்தில் புது வீடு கட்டியுள்ளாராம் செந்தில் கணேஷ். தனது தாய் தந்தையின் கனவு இல்லம் என அந்த வீட்டை குறிப்பிட்டுள்ளார் செந்தில் கணேஷ். இதோ அந்த வீட்டின் புகைப்படங்கள்.