திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செந்தில் கணேஷ் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு தொகை வாங்குகிறார் தெரியுமா?? அவரே கூறிய உண்மை!
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சிமூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள்தான்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானார்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடைசி வரை சென்று பட்டத்தை கைப்பற்றினார் செந்தில் கணேஷ். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக பாடி வருகிக்கின்றனர். சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலம்.
செந்தில் கணேஷின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் இவர்களின் கிராமிய இன்னிசை நிகழ்ச்சி திருவிழாக்களில் நடைபெறும். இந்தநிலையில், இவர்கள் அதிக சம்பளம் கொடுத்தால் தான் பாடுவார்கள் என்று ஒரு தகவலும் வெளியானது.
இதனையடுத்து இதற்கு பதிலளித்த இவர்கள் ஒரு பாட்டு கச்சேரிக்கு நாங்கள் வாங்கும் சம்பளம் ஒரு லட்சம் தான். ஆனால் அந்த பணத்தில் எங்களுடன் பாடும் கலைஞர்கள் மற்றும் வாசிப்பவர்கள் என மொத்த குழுவிற்க்கும் சேர்த்து தான் அவ்வளவு சம்பளம் கூறியுள்ளனர்.