திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி 8 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்கள் தெரியுமா..? வைரல் புகைப்படம் உள்ளே..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பட்டத்தை கைப்பற்றினார் செந்தில் கணேஷ். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் பல்வேறு படங்களில் பாடும் வாய்ப்புகள் இவர்களுக்கு குவிந்துவருகிறது. சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் இன்றுவரை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது.
இப்படி குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர்கள் 8 வருடத்திற்கு முன் எப்படி இருந்தார்கள் என்று அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. 8 வருடத்திற்கு முன்பும் அவர்களின் தோற்றத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அவர்களின் புகைப்படம்.