திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடும்பத்துடன் போஸ் கொடுத்த செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி! எதுக்காக தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சிமூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள்தான்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானார்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கடைசி வரை சென்று பட்டத்தை கைப்பற்றினார் செந்தில் கணேஷ்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக பாடி வருகிக்கின்றனர். சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலம். இந்நிலையில் தேர்தல் நாளான நேற்று சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி இருவரும் வாக்களித்துவிட்டு குடும்பத்துடன் அதை புகைப்படமாக வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்.