மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. தமிழும் சரஸ்வதியும் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
தற்காலத்தில் சினிமாக்களைவிட தொலைக்காட்சி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அவ்வாறு வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த தொடர்கள் ஏராளம். அந்த சீரியலின் ஒவ்வொரு எபிசோடுகளையும் ரசிகர்கள் தவறாமல் பார்த்து வருகின்றனர்.
அவ்வாறு கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன், தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் ஹீரோவாக தீபக் மற்றும் கதாநாயகியாக சரஸ்வதி கதாபாத்திரத்தில் நக்ஷத்திரா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இது தொடர்ந்து தமிழில் தம்பியாக கார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவீன்.
இவர் இதற்கு முன்பு தேன்மொழி பிஏ உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். நவீன் மனைவி சௌமியா. அவர் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் அவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. தற்போது நவீன்- சௌமியா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே மகிழ்ச்சியுடன் பகிர்ந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.