திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா... அட இவரா!! வைரலாகும் புகைப்படம்...
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் இன்று தனது 72 வயது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்க்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க ரஜினி வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் இல்லை வெளியூர் சென்று விட்டதாக லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அதே போல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரஜினியின் புகைப்படத்தை பகிர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் ரஜினியுடன் தாங்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் இருந்து ரஜினியுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.