கொலு கொலு கன்னம்.. சன் டிவி அழகு சீரியல் ஸ்ருதியா இது! தேவதை போல் ஜொலிக்கும் வைரல் புகைப்படங்கள்!



serial-actor-sruthiraj-latest-photo

சன் டிவி அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜின் செம குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியின் பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி, தற்போது சிறுவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என பலரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஒன்று அழகு. நடிகை ரேவதி முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவந்த இந்த தொடரில், தொடரின் நாயகியாக நடித்தவர்தான் ஸ்ருதி ராஜ். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ருதி, அதனை தொடர்ந்து  ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற ஏராளமான தொடர்களில்நடித்துள்ளார்

தற்போது கொரோனா ஊரடங்கிற்கு  பிறகு  சீரியலிலும் தலைகாட்டாத இவர், தற்போது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பயங்கர பிசியாக உள்ளார். அவ்வப்போது  தனது புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், தற்போது கொலு கொலு கன்னம் கொண்ட முகத்தில் அழகிய சிரிப்புடன், புடவை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட, அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.