மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் கார் டிரைவர் செய்த மிக மோசமான காரியம்.! வேதனையில் துடித்துபோன பிரபல நடிகை!!
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா தத்தா. இவர் பெங்காலி தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் இவர் போலீசாரிடம் கார் டிரைவர் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
நடிகை ஸ்வஸ்திகா படப்பிடிப்பு தளங்களுக்கு வாடகை கார் மூலம் செல்வது வழக்கம். இந்நிலையில் அவர் நேற்று வாடகை கார் ஒன்றை புக் செய்து படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.அப்பொழுது நடந்த மோசமான சம்பவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில். அவர் நான் படப்பிடிப்பிற்கு செல்ல உபேர் வாடகை கார் ஒன்றை புக் செய்தேன். ஜாம்ஷெட் என்ற நபர் காரை ஓட்டி வந்தார். நான் காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும், அந்த நபர் டிரிப்பை கேன்சல் செய்து நடுரோட்டில் என்னை இறங்குமாறு கூறினார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்து அவருடன் வாக்குவாதம் செய்தேன்.
அதன்பின் அவர் காரை வேறு வழியில் விட்டு அவரது பகுதிக்கு அழைத்து சென்றார் பின்னர் என்னை காரை விட்டு இறங்கும்படி மிரட்டினார். மேலும் என்னை வெளியே இழுத்தார். நான் கத்தினேன். அந்த நபர் அவருக்கு தெரிந்த ஆட்களை அழைத்தார். பின்னர் படப்பிடிப்புக்கு நேரம் ஆனதால் நான் கிளம்பி விட்டேன் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த நபரின் புகைப்படத்தையும், போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார் இதனை தொடர்ந்து நடிகை ஸ்வஸ்திகா தந்தை இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.