#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதிய சீரியலில் நடிக்கும் ஆல்யா மானசாவுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி என்ற சீரியலில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா.
இவர்கள் இருவரும் சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வந்த நிலையில் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அதனால் சில காலம் சீரியலில் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். அதாவது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் புதிதாக தொடங்கவுள்ள இனியா என்ற தொடரில் ஆல்யா நடித்துள்ளார். இதற்காக ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் பெறுகிறாராம்.
ஆனால் இதற்கு முன்பு விஜய் டிவியில் நடித்து வந்த போது ஆல்யா மானசாவுக்கு 12 முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாம். தற்போது சன் டிவியில் அதிக சம்பளம் வாங்குகிறாராம்.