#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சின்னத்திரையில் ஆணாக நடிக்கும் பிரபல நடிகையின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள்!
பிரபல தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தாள் எனும் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இவர் விலகினார். பின்னர் ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார்.
ஆயிஷா கேரளாவில் உள்ள காசர்கோடு எனுமிடத்தில் பிறந்தார். இவர் சென்னையில் மேற்படிப்பிற்காக வந்தார். ஆனால் இவரது தோழியின் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஆயிஷா 'சத்யா' என்னும் ஆண் தன்மை கொண்ட பெண்ணாக நடித்து வருகிறார்.
ஆண் வேடத்தில் தன்னைப் பார்த்து சலித்து போன ரசிகர்களை குஷியாக்குவதற்காக ஆயிஷா, சமீபத்தில் நடந்த போட்டோ சூட்டில் எடுத்த கல்க்கல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.