திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் சீசன் 6ல் கண்டிப்பாக இந்த சீரியல் ஹீரோயின் இருப்பார்.! அடித்து கூறும் பிக்பாஸ் பிரபலம்.! யார்னு பார்த்தீங்களா!!
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 6வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சீசனையும் உலகநாயகன் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்.
இதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பிக்பாஸ் 6வது சீசனுக்கான டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஃபாத்திமா பாபு பிக்பாஸ் சீசன் 6வது சீசனில் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள போட்டியாளர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ஆயிஷா பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்பார் என கூறியுள்ளார். இதற்ககேற்றார் போல் சத்யா தொடரும் விரைவில் முடிவடைய உள்ளதாம். அதனால் ஆயிஷா பிக்பாஸ் சீசன் 6 ல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.